மற்றவர்களுடைய குற்றங்களை மன்னியுங்கள்

0

இன்றைய காலகட்டங்களில் நாம் தேவனுக்கு பிடிக்காத காரியங்களை செய்து கொண்டு மற்றவர்கள் நம்மை பார்க்கும் போது நாம் பெரிய ஆளாக தெரிய வேண்டும், நம்மை எல்லோரும் நல்லவர்கள் என்று நினைக்க வேண்டும் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படியாக நாம் வெளித்தோற்றத்தில் நல்லவர்களாகவும், உள் தோற்றத்தில் கெட்டவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் தேவன் நம்மை எப்படி பார்க்கிறார் என்றால் நம்முடைய வெளித்தோற்றத்தை அல்ல. நம்முடைய இருதயத்தை பார்க்கிறார்.

எனவே நாம் பிறந்தது முதல் நன்மை, தீமை அறிய பழகின இன்றைய நாட்கள் வரை யாரையெல்லாமல் பார்த்திருக்கிறோம். அப்படி பார்த்து பழகியவர்களிடம் நம்முடைய கசப்பான அனுபவங்களையும், மன்னிக்க முடியாத குற்றங்களோடும் நம் இருதயத்தில் குற்றமுள்ளவர்களாய் தான் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதைத்தான் வேதாகமத்தில் கொலோ: 3-13-ல் ஒருவரை யொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்கு குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே நாமும் இந்த தவக்காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டும் நல்லவர்களாய் இருக்காமல் இருதயத்தில் நல்ல சிந்தனை உடையவர்களாய் இருப்போம்.

இப்படி இருதயத்தில் நல்ல சிந்தனையை நாம் கொண்டு வரும் போது இதுவரை யாரையெல்லாமல் வெறுத்து இவர்கள் நமக்கு ஆகாது, இவர்கள் செய்த குற்றங்களை மன்னிக்கவே முடியாது என்று எண்ணிக்கொண்டிருக்காமல், நான் குற்றம் செய்திருந்திருந்தாலும் என்னை மன்னித்து விடுங்கள், உங்கள் குற்றங்களையும் நான் மன்னித்து விட்டேன் என்று பகையை மறந்து வாழ வேண்டும் என்று தேவனிடத்தில் ஜெபிப்போம். நம்முடைய குற்றங்களுக்காக சிலுவையில் பாடுகள் அனுபவித்தார் என்று நினைவு கூறும் இந்த தவக்காலத்தில் மற்றவர்களுடைய குற்றங்களை மன்னிக்க நாம் ஒவ்வொருவருக்கும் தேவன் கிருபை செய்வாராக ஆமென்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here