மற்றவர்களின் உடலைப்பற்றி பண்பற்ற முறையில் விமர்சித்தால் சட்டரீதியாக தண்டிக்கப்படலாம்

file pic

மற்றவர்களின் உடம்பைப் பற்றி பண்பற்ற விமர்சனங்கள் செய்வது மரியாதையற்று பேசுவது போன்ற நடவடிக்கை சட்டரீதியில் குற்றமாகும் என போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) அப்துல் ஹமிட் பாடோர் கூறுகிறார்.
அத்தகைய குற்றங்களைப் புரிவார்கள் 1998 தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் (சிஎம்ஏ) பிரிவு 233 (ஐ), (ஏ), (பி), குற்றவியல் (பீனல் கோட்) பிரிவு 509 மற்றும் 1955 சிறிய குற்றங்கள் சட்டம் முதலிய வற்றின் கீழ் தண்டிக்கப்படலாம் என்று அப்துல் ஹமிட், சினார் ஹரியானிடம் நேற்று கூறினார்.
சிஎம்ஏயின் கீழ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் ரிம. 50,000 மேல் போகாமல் அபராத மும் அல்லது ஒரு வருடம் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இதற்கிடையே குற்றவியல் (பீனல் கோடு) பிரிவு 509 கீழ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப் பட்டவர்கள் ஐந்து வருடம் வரையிலான சிறை தண்டனைக்கு உட்படுத் தப்படலாம்.
சிறிய குற்றங்கள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டவர்களுக்கு ரிம. 100க்கும் மேல் போகாமல் அபராதம் விதிக்கப்படலாம்.
இதற்கிடையே, மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணயத்தின் (எம்சிஎம்சி) தலைவர் ஃபாடுள்ளா சுகாமீ கூறுகையில் இந்த ஆணையம் இவ்விசயத்தில் தொழிற்நுட்ப ரீதியாக போலீசுடன் ஒத்துழைக்கும் என்றார்.
ஆன்லைன் மூலம் உடம்பு அவமதிப்பு, பண்பற்ற விமர்சனங் களுக்கு ஆளான நபர்கள் முதலில் போலீஸ் புகார் செய்ய வேண்டும். பிறகு தான் எம்சிஎம்சியைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். எம்சிஎம்சி நிர்வாக தொழில் நுட்பக் கூறுகள் ரீதியாக காவல் துறையுடன் ஒத்துழைக்கும்.
அவ்வழக்குகளை போலீசார் உறுதிப்படுத்தியதுடன் இணை வளைத்தளங்களின் கணக்குகளை மூடுவதற்கு முன்பு கூகுள் மற்றும் யூ டியூப் நிறுவனங்களை எம்சிஎம்சி தொடர்பு கொள்ளும.
முகநூலில் ஒரு பிரசித்தி பெற்ற நபர் ஒருவர் தமது உடம்பைப்பற்றி அவமரியாதையாக பேசியதைத் தொடர்ந்து ஒரு பெண் போலீசில் புகார் செய்த பிறகு இப்பிரச்சினை எழுந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − nine =