மருத்துவ, விளையாட்டு சுற்றுலாவை சிலாங்கூர் ஊக்குவிக்கும்

0

மலேசியாவிற்கு வருகை புரியுங்கள் ஆண்டு 2020ஐ யொட்டி மாநிலத்திற்கு 8 மில்லியன் சுற்றுப்பயணிகள் வருகை புரிவர் என்று சிலாங்கூர் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. ‘

2018ஆம் ஆண்டில் 7.2 மில்லியன் சுற்றுப்பயணிகள் மட்டுமே சிலாங்கூருக்கு வருகையளித்ததாக தெரிவித்த மாநில சுற்றுலா, கலாசார மலாய் நாகரீக மற்றும் பாரம்பரிய செயற்குழுவின் தலைவர் டத்தோ அப்துல் ரஷீட் அசாரி இதனால் வரி மூலம் மாநிலத்திற்கு 20.6 மில்லியன் வெள்ளி வருமானம் கிடைத்தது என்றார். உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுப்பயணிகளைக் கவர சில அம்சங்கள் மீது சிலாங்கூர் கவனம் செலுத்தி வருகிறது என்றார் அப்துல் ரஷீட்.

மருத்துவ சுற்றுப்பயணி களை கவர மலேசிய சுகாதார சுற்றுப்பயண மன்றத்துடன் இணைந்து மாநில அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. விளை யாட்டு சுற்றுப் பயணத்தை ஊக்குவிக்க சில நிகழ்வுகளை சிலாங்கூர் நடத்தவுள்ளது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − seven =