மருத்துவச் சுற்றுப் பயணிகள் மட்டுமே நாட்டுக்குள் வர அனுமதி

மீட்சி நடமாட்டக் கட்டுப்பாட் டுக் காலத்தில் கடும் நோய்க்காக நாட்டுக்குள் வர அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், நாட்டில் தங்கியிருக்க அனுமதிப்படுவர் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
1ஏ எனும் பிரிவின் கீழ், அணுக்கக் கண்காணிப்புப் பிரிவு சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டவர்கள் இங்கு தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்தார். 1பி எனும் பிரிவின் கீழ், கடுமையான, சிக்கலான புற்றுநோய் போன்ற நோய்களி னால் பாதிக்கப்பட்ட நோயாளி கள், தங்கி சிகிச்சை பெற அனுமதிக் கப்படுவதாகவும் ஆனால், அதற்கு முன்னர் மலேசிய சுகாதார சுற்றுலா மன்றத்தின் அனுமதியை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
சிகிச்சை பெற அனுமதியைப் பெற்றிருப்பதோடு அவர்கள் மலேசியாவுக்கு வருவதற்கு 3 நாள்களுக்கு முன்னர், சொந்த நாட்டில் கோவிட்-19 சுகாதாரப் பரிசோதனை செய்து கொண்டிருக்க வேண்டும். மேலும், சிகிச்சைக்கான செலவுக் கட்டணத்தைச் செலுத்தியிருப்பதோடு, மை செஜாத்ரா எனும் செயலியைக் கைப்பேசியில் பதிவு செய்திருக்க வேண்டும்.
அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை, சம்பந்தப்பட்டவரை விமான நிலையத்திலிருந்து மருத்துமனைக்குக் கொண்டுவரும் ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.
இதற்கு முன்னர், மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினர் மலேசியாவின் குடிநுழைவுத் துறையின் அனுமதியின்றி வரலாம் என்று ஜூன் 19ஆம் தேதி அவர் அறிவித்திருந்தார்.
சம்பந்தப்பட்ட நோயாளி, தம்மைக் கவனித்துக் கொள்ள உடன் ஒருவரைக் கொண்டுவர அனுமதிப்பதாகவும் அவரும் சொந்த நாட்டில் கோவிட்-19 சுகாதாரப் பரிசோதனைக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
12 வயதுக்கும் குறைவான வயதுடைய நோயாளியைப் கவனித் துக் கொள்ள இருவர் உடன்வர அனுமதிக்கப்படுவர் என்று இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 1 =