மரினா மகாதீர்- அம்பிகா மீது போலீஸ் விசாரணை

0

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நியமனத்திற்கு எதிராக இங்குள்ள ‘சோகோ’ பேரங்காடிக்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் புதல்வி மரினா மகாதீர் மற்றும் பெர்சேவின் முன்னாள் தலைவர் டத்தோ அம்பிகா சீனிவாசன் ஆகியோருக்கு எதிராக போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட் பாடோர் கூறினார். ‘மலேசியாவை பாதுகாப்போம்‘ என்ற கருப்பொருளோடு கட்சித்தாவலுக்கு எதிராக இந்த அமைதி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தப் பேரணியின் ஏற்பாட்டாளர்கள் 2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணிச் சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டதோடு, பேரணி நடத்த அனுமதியைப் பெறாமல் அதனை நடத்தியது குற்றம் என டாங் வாங்கி போலீஸ் ஏசிபி முகமட் பாஃமி விஸ்வநாதன் தெரிவித்தார்.
பேரணியை ஏற்பாடு செய்தோர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முஹிடின் யாசின் நாட்டின் 8ஆவது பிரதமராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, அந்தப் பேரணி நடத்தப்பட்டது. மாலை 6 மணிக்குத் தொடங்கி இரண்டு மணி நேரம் அது நீடித்தது.

பெரிய தலைவர்கள் சம்பந் தப்பட்ட கிரிமினல் வழக்கு களை புதிய அரசாங்கம் ரத்து செய்யக்கூடும் என்று அப்பேரணியில் பேசிய சமூக நல ஆர்வலர் மரினா மகாதீர் கூறுகிறார்.
இதில் முன்னாள் பிரதமர் நஜிப்பின் எஸ்.ஆர்.சி. இண்டர் நேஷனல் மற்றும் 1 மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட் (1 எம்.டி.பி.) போன்ற வழக்கு களும் அடங்கும் என மரினா மகாதீர் குறிப்பிட்டார்.
நம்பிக்கைக் கூட்டணி நிர்வாகத்தை மாற்றியமைத்த புதிய பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் தேடப் பட்டு வரும் நாடோடி வணிக ரான லோ தியேக் ஜோவை அவரின் அனைத்து குற்றச் சாட்டுகளிலிருந்தும் விடு வித்து விடுதலை கூட செய்யக் கூடும் என்று மரினா குறிப்பிட் டார்.
அவர்களின் வழக்குகள் மலேசியாவில் ரத்து செய்யப் பட்டால், நிலைமை அத்துடன் முடிந்துவிடப் போவதில்லை. அமெரிக்காவின் (யு.எஸ்.) நிதி இலாகா அவர்கள் மேல் நடத்திக் கொண்டிருக்கும் தன்னுடைய விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ளும்.
அவர்கள் மேல் ஏகப்பட்ட வழக்குகள் இருக்கின்றன. அவர்கள் அந்த அனைத்து வழக்குகளைத் தள்ளுபடி செய்யப்போவதை நாம் அனைவரும் பார்க்கத்தான் போகிறோம் என்று நான் எண்ணுகிறேன். மறுபடியும் ஜோ லோ சுதந்திரமாக தெருக்களில் நடந்து கொண்டு திரிந்தால், நமக்கு நிலைமை புரிந்துவிடும் என அவர் கூறினார்.
எதுவாக இருந்தாலும் சரி, அவர்கள் இவ்வழக்குகளை இங்கு தள்ளுபடி செய்தால், அமெரிக்காவின் நிதி இலாகாவை அது நிறுத்த முடியாது என்று அப்பேரணி யில் மரினா மகாதீர் மைகாதீர் கூறினார். அதில் ஏறக்குறைய 200 பொது மக்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 42 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அதில் கிரிமினல் நம்பிக்கை மோசடி, ஊழல், பதவி துஷ்பிரயோகம் மற்றும் பணச் சலவை அவற்றுள் அடங்கும். இதைத்தவிர 1 எம்.டி.பி. தொடர்பாக 5 கிரிமினல் வழக்குகளை நஜிப், எதிர்நோக்குகிறார். அதேபோல், அம்னோவின் உதவித்தலைவரான சையிட் ஹமிடியும் 45 ஊழல் வழக்குகளை எதிர்நோக்கியுள்ளார் என அவர் கூறினார்.
இதே நோக்கத்தில் டத்தாரான் மெர்டேக்காவில் நடந்த மற்றொரு அமைதிப் பேரணியின் ஏற்பாட்டாளராக கருதப்படும் வழக்கறிஞர் ஃபாடியா நட்வா அமைதி பேரணி சட்டம் மற்றும் நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று போலீஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட் படோர் கூறினார்.
இதனிடையே பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 2 =