மரண தண்டனைக்குப் பதிலாக மாற்றுத் தண்டனை விதிக்க பரிந்துரை

0

மரண தண்டனைக்குப் பதிலாக மாற்றுத் தண்டனையை விதிக்கும் பரிந்துரை ஆராயப்பட்டு வருவதாகப் பிரதமர் துறை அமைச்சர் டத்தோ லியூ வுய் கியோங் தெரிவித்தார்.
அதனை ஆய்வு செய்ய கடந்த ஆகஸ்டில் தோற்றுவிக் கப்பட்ட பணிக்குழு தனது ஆய்வறிக்
கையைத் தம்மிடம் சமர்ப்பித்துள்ள தாகவும், அதனைத் தாம் ஆய்வு செய்து, அமைச்சரவையில் சமர்ப் பிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன் சட்ட மசோதா அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
மேலும், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனையை அனுபவித்து வருவோரை விடுவிப்பது சம்பந்தமாகவும் அது ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அந்தப் பணிக்குழுவில் முன்னாள் தலைமை நீதிபதி, முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அலுவலக அதிகாரிகள், கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள்
நீதிபதி, வழக்கறிஞர் மன்றம்
மற்றும் சுஹாகாமின் பிரதிநிதி கள் ஆகியோர் இடம் பெற்றிருக் கின்றனர். மலேசியாவில் மரண தண்டனை அமலில் இருந்தாலும், அதில் 11 குற்றச்செயல்களுக்கு மரண தண்டனைக்குப் பதிலாக மாற்றுத் தண்டனைகள் வழங்கப்படு கின்றன. அவை, நீதிபதியின் முடிவுக்கே விடப்பட்டுள்ளன. மரண தண்டனையை அகற்றப் போவதாக பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் வாக்குறு தியில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − three =