மரங்கள் நடும் திட்டத்தை மீண்டும் தொடங்கியது நெஸ்லே மலேசியா

காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கும், பூஜ்ஜிய நிகர உமிழ்வுக்கான நிறுவனத்தின் உலகளாவிய பயணத்திற்கு பங்களிப்பதற்கும் அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2023 ஆம் ஆண்டுக்குள் மலேசியா முழுவதும் மூன்று மில்லியன் மரங்களை நடும் நோக்கத்துடன் நெஸ்லே மலேசியாProject RELeaf எனும் திட்டத்தை 2020 செப்டம்பரில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் நெஸ்லே மலேசியா இதுவரை சபாவில் ஒரு மில்லியன் மரங்களை நட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நெஸ்லே மலேசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜுவான் அரனோல்ஸ் கூறுகையில், “2020ஆம் ஆண்டு செப்டம்பரில் நெஸ்லே மலேசியா இந்த மரம் நடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்குப் பிறகு அரசு நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை அமல்படுத்தியதைத் தொடர்ந்து இத்திட்டம் தக்காலிகமாக நிறுத்தப்பட்டது. எவ்வாறாயினும், நாங்கள் எங்கள் நோக்கத்தில் உறுதியாக இருந்தோ. இதன் விளைவாக நெஸ்லே மலேசியா இதுவரை 1 மில்லியன் நாற்றுகளையும் பல்வேறு உள்நாட்டு இனங்களின் மரக்கன்றுகளையும் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வளர்க்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதிக்குள், அந்த மரங்களில் சுமார் 300, 000 மரங்கள் பல இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பூட்டுதல்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நாங்கள் இத்திட்டத்தை மீண்டும் தொடங்குவதில் மகிழ்ச்சியடைகின்றோம்” என்றார். “இத்திட்டத்தை வெற்றி அடைய செய்வதற்கு நாங்கள் பல தனியார் நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றோம். மேலும், இத்திட்டதின் அளவை அதிகரிப்பதை உறுதி செய்வதற்கும் அரசு மற்றும் மாநில நிறுவனங்களுடனும் நாங்கள் ஒத்துழைத்து வருகின்றோம். 2022இல் 1.3 மில்லியன் மரங்களையும், அதைத் தொடர்ந்து 2023இல் 1.4 மில்லியன் மரங்களையும் நடுவதற்கான உறுதியான திட்டமும் வளங்களும் எங்களிடம் உள்ளன. “2030க்குள் குறைந்தபட்சம் 50 சதவீத குறைப்புடன், 2050க்குள் பூஜ்ஜிய நிகர கார்பன் உமிழ்வை அடைவதற்கான எங்கள் லட்சியத்தை நிறைவேற்றுவதற்கு நாங்கள் முழுமையாக முயற்சித்து வருகின்றோம். எங்கள் மிளகாய், நெல் மற்றும் காப்பி விவசாயத்தில் மறுஉற்பத்தி செய்யும் விவசாய நடைமுறைகளும் இந்த திட்டத்திற்கு உதவும். இந்த வார தொடக்கத்தில் மலேசிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பசுமை எரிசக்தி கட்டணத்தை ஆதரிக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவராக இருப்பதற்கும் நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று அவர் மேலும் கூறினார். இத்திட்டத்தின் முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கோலா சிலாங்கூர் இயற்கை பூங்காவில் சதுப்புநில நடவு நடவடிக்கைக்காக நெஸ்லே மலேசியா அரசு சாரா நிறுவனமான ஐஅயீயஉவ சுநஎடிடரவiடிn நுவேநசயீசளைந நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இப்பகுதியின் விலைமதிப்பற்ற சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, 100க்கும் மேற்பட்ட நெஸ்லே மலேசியாவின் தன்னார்வலர்கள் சதுப்புநிலக் காடுகளுக்குள் 500க்கும் மேற்பட்ட சுhணைடியீhடிசய ஹயீiஉரடயவய எனும் மரக்கன்றுகளை நட்டனர். நெஸ்லே மலேசியாவின் விவசாய சேவைகளின் தலைவர் யோங் லீ கெங் கூறுகையில், “பல்வேறு வகையான உள்நாட்டு தாவரங்கள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும் முயற்சியில் கோலா சிலாங்கூர் இயற்கை பூங்காவில் இந்த சதுப்புநில காடுகளை மறுசீரமைக்கும் முயற்சியை மேற்கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சதுப்புநிலக் காடுகள் மலேசியாவின் விலைமதிப்பற்ற சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும். அதுமட்டுமின்றி, இவை காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சதுப்புநில மறுசீரமைப்பு செயல்பாடு என்பது நெஸ்லேவின் உலகளாவிய தளமான நெஸ்லே கேர்ஸின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமாகும். இது ஊழியர்களிடையே தன்னார்வ கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு முன் நெஸ்லே கேர்ஸ் தன்னார்வத் தொண்டர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கம்போங் சிஜாங்காங்கிற்கு அருகே மற்றொரு சதுப்புநில நடவு நடவடிக்கையை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, மலேசியாவின் பல இடங்களில் உள்ள கடற்கரைகளையும் இவர்கள் சுத்தம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × four =