மனிதவள அமைச்சு மௌனம் காப்பது ஏன்?

0

நாட்டின் மூலப்பொருள் உற்பத்திக்கு தங்களை வழங்கிவரும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் அதிகாரம் மனிதவள அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது இதுவரை மனிதவள அமைச்சர், தேசிய முத்தரப்பு ஆலோசனை மன்றத்தைக்கூட்டி தற்போது கொரோனா நச்சுத்தொற்றினால் வேலையின்றி நசிந்துபோன தொழிலாளர்களின் சம்பளத்தைப்பற்றி பேசாமல் இருப்பதும், இது குறித்து வீட்டை விட்டு வெளியே வராத தொழிலாளர்களுக்கு முதலாளிமார்கள் சம்பளம் வழங்க வேண்டும் என்று ஊடகங்களில் செய்தியாகப் பேசிவருவதும் பிரச்சினைக்கு தீர்வாகாது என்று சிவநேசன் சுட்டிக்காட்டினார்.
தொழிற் சங்கம், முதலாளிமார் சங்கம் மற்றும் அரசு என்று இந்த முத்தரப்பு இணைந்து புரிந்துணர்வுடன் சம்பளத்தைப்பற்றி பேசி இணக்கம் கண்டிருக்க வேண்டும்.
சம்பளம் கொடுக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு கூறுகிறது. இந்த இக்கட்டான பொருளாதாரச் சூழலில் எங்களால் கொடுக்க இயலாது என்று முதலாளிமார் சங்கம் எதிர்கொள்கிறது என்றார் பேரா மாநில ஜசெக உதவித் தலைவருமான சிவநேசன்.
சிறு தொழில் செய்பவர்கள் மிகவும் சிரமத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். குத்தகையாளரிடம் பணி புரியும் தொழிலாளர்களும் துன்பத்தை சுமக்கின்றனர். தங்கு விடுதி உரிமையாளர்கள் பயனீட்டாளர்களின்றி தவிக்கின்றனர்.
இப்பிரச்சினைக்கெல்லாம், அரசு என்னதான் முடிவு வைத்துள்ளது? என்ன செய்ய உத்தேசித்துள்ளது? என்ற தகவல் எதுவும் இல்லை.
முத்தரப்பும் ஒன்று கூடி பேசினால் சிக்கல்களை விரட்ட முடியும் என்று சிவநேசன் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 7 =