மனமகிழ் மையத்தில் அதிரடிச் சோதனை

இங்கு பண்டார் ரிம் பாயு வட்டார த்தில் செயல்படும் ஒரு மனமகிழ் மையத்தில் நேற்று முன்தினம் இரவு கோலலங்காட் நகராண்மைக்கழக அமலாக்கப் பிரிவினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் பல்வேறு குற்றங்களுக்காக சம்மன்களை வழங்கி னர். மனமகிழ் மையத்தில் எஸ்ஓபியை மீறியதோடு வந்திருந்த வாடிக்கை யாளர்கள் இருக்கைகளில் நெருக்க மாக கூட்டமாக அமர்ந்திருந்தது. அதே வேளையில் அங்கு பணியில் இருந்த வர்கள் வாடிக்கையாளர்களுக்கு முகக் கவரி அணியாமல் உணவைப் பரிமாறியது உட்பட 11 குற்றங்களுக்கு சம்மன்கள் வழங்கப்பட்டதாக இந்த நடவடிக்கைக்குப் பொறுப் பேற்ற ரம்லான் பாசிர் தெரிவித்தார். இந்த ரிம் பாயு பகுதியில் மேலும் 7 உணவகங்களில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது நேரம் கடந்தும் உணவகங்களை மூடாமல் வைத்திருந்தது. வாடிக்கையாளர்கள் அதிகமாக காணப்பட்டது போன்று இன்னும் சில குற்றங்களுக்காக குற்றப் பதிவுகள் செய்யப்பட்டு சம்மன்கள் உணவக உரிமையாளரிடம் வழங்க ப்பட்டதாக அவர் கூறினார். சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை படி இந்த நடவடிக்கையில் தமது குழுவினர் செயல்பட்டதாக ரம்லான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + ten =