மனஅழுத்தம் காரணமாக குடும்ப
வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு

நாட்டில் கோவிட்-19 தொற்றினைத் தடுக்க நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பின்னர், மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அதனால் ஏற்படும் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
நோய்த் தொற்று, அதனைத் தொடர்ந்து நிலையற்ற எதிர்காலத்தின் மீதான அச்சம் போன்றவை தனி மனிதரிடையே மன அழுத்தத்தை உருவாக்குவதாக மனநல மருத்துவர் ஆல்வின் டான் தெரிவித்தார்.
இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலை ஆண்களையும் பெண்களையும் சரிசமமாகப் பாதிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதில், வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் பெண்களே ஆண்களை விட அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
மனஅழுத்தத்தின் காரணமாக ஆண்களே பெரும்பாலும் வன்முறையில் இறங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
குடும்ப உறுப்பினர்களைத் தாக்குவது போதைப்பொருளை உட்கொள்வது, மதுவுக்கு அடிமையாவது போன்ற காரியங்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
தற்கொலை முயற்சிகளும் நடக்கின்றன.
மார்ச் 18ஆம் தேதியிலிருந்து நவம்பர் மாதம் வரையிலும் 266 தற்கொலைகள் நடந்துள்ளதாக கோஸ்மோ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதniடையே, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் சித்தி ஸலேஹா முகமட் யூசோப் மக்களவையில் பேசும்போது, ஜனவரியிலிருந்து நவம்பர் வரை உதவி கோரி வந்த 159,703 தொலைபேசி அழைப்புகளில், வன்முறை சம்பந்தமாக 2,287 அழைப்புகள் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தார்.
எனவே, மனஅழுத்தம் காரணமாக வன்முறைச் சம்பவங்களும் தற்கொலை முயற்சிகளும் அதிமாகி வருவதால், அரசு அதனைத் தடுக்க தகுந்த திட்டங்களைத் தீட்ட வேண்டுமென்றுஅ ஆல்வின் டான் கேட்டுக் கொண்டார்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × four =