மந்திரி பெசார் பதவியை அஸுமு ராஜினாமா செய்தார்

0

பேரா பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து 24 மணி நேரத்திற்குப் பிறகு அமாட் பைஸால் அஸுமு மந்திரி பெசார் பதவியை ராஜினாமா செய்தார்.
நேற்று காலை இஸ்தானா கிந்தாவில் பேரா ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷாவுடன் நடத்தப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு சென்டெரியான் சட்டமன்ற உறுப்பினருமான அவர் ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்தார்.
பக்காத்தான் ஹராப்பானில் இருந்து பெர்சத்து விலகிக் கொண்டதால், மந்திரி பெசார் பதவியை தாம் ராஜினாமா செய்ய நேர்ந்ததாக சுல்தானிடம் தாம் விளக்கமளித்ததாக அவர் சொன்னார்.
அவரது ராஜினாமாவால் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் பதவிகளை இழந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
புதிய பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் புதிய மந்திரி பெசார் யார் என்பதை பேரா சுல்தான் முடிவு செய்வார் என்றார் அவர்.
பேரா மாநிலத்தில் ஜசெகவின் 2 சட்டமன்ற உறுப்பினர்களும் அமானாவின் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் நேற்று முன்தினம் பக்காத்தான் ஹராப்பானில் இருந்து விலகி தங்களை சுயேச்சைகளாக அறிவித்துக் கொண்டனர்.ய

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − five =