மந்திரி பெசார் – ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும்

0

வெளிப்படைத் தன்மை மற்றும் ஊழலற்ற ஒரு வேலை கலாசாரத்தை மேம்படுத்தும் முயற்சியாக சிலாங்கூர் மந்திரி பெசார் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தங்களுடைய சொத்துகளை அறிவிக்க வேண்டும் என சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி இது நடைமுறைக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மாநில அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முழுமையான ஆதரவைத் தந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தொடரில் சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மைக்கேல் இங் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
தங்களுடைய சொத்துகளை அறிவிப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முடிவை மாநில அரசாங்கம் பின்பற்றும் என்ற மைக்கேல் இங்கின் கேள்விக்கு மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.
அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய சொத்துகளை அறிவிக்கவேண்டும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மந்திரி பெசார், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழலில் இருந்து விடுபட இது மிக அவசியம் என அண்மையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் லத்திபா கோயா கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =