மந்திரி பெசாருடன் ஜொகூர் மஇகா சந்திப்பு

ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி அகமதுடன் ஜொகூர் மஇகா தொடர்ப்புக்குழு நேற்று அதிகாரப்பூர்வ சந்திப்பை நடத்தியது.
ஜொகூர் மஇகா தலைவரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான ஆர். வித்தியானந்தன் தலைமை யில் ஜொகூர் மஇகா பல்வேறு விவகாரங்கள் குறித்து மந்திரி பெசாருடன் கலந்துரையாடல் நடத்தியது.
ஜொகூர் மாநிலத்திலுள்ள இந்தியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக ஜொகூர் மஇகா தகவல் பிரிவுத் தலைவர் எஸ். தேவா கூறினார்.
இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள், சிறு தொழில், குத்தகை, இளைஞர் மற்றும் மகளிருக்கான
சிறப்பு திட்டங்கள் போன்றவை குறித்து டத்தோ ஹஸ்னியிடம் விரிவாக பேசப்பட்டதாக அவர் கூறினார்.
இதனிடையே மாநிலத்திலுள்ள இந்திய சமூகத்தின் விவகாரங்களுக்கு தாம் முக்கியத்துவம் தரவிருப்பதாக டத்தோ ஹஸ்னி உறுதியளித் தார்.
அதே வேளையில் எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு முழுமையான ஆதரவை வழங்கும்படி
இந்திய சமூகத்தை மந்திரி
பெசார் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 14 =