மத நல்லிணக்கத்திற்கு ஏற்ற கருத்துகளை ஊடகங்கள் வெளியிட வேண்டும்

0

மத ஒற்றுமை நலிவு பெறாமல் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு நாட்டில் அது தொடர்பான கூடுதலான அறிக்கைகளையும், தகவல்களையும் ஊடகங்கள் அதிகளவில் வெளியிடுவது சாலச் சிறந்த நடவடிக்கை என்று தகவல் தொடர்பு பல்லூடாக துணையமைச்சர் எடின் ஷஸ்லி சித் தெரிவித்தார்.
மதம் தொடர்பான சர்ச்சைகள் நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடாது. ஒவ்வொருவரும் மற்ற மதத்தின் மீது நல்ல புரிந்துணர்வை கொண்டிருத்தல் வேண்டும். ஆக, அதற்கு ஊடகங்களின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்று. கூடுமான வரை ஊடகங்கள் மத நல்லிணக்கம் தொடர்பான ஆதரவு கருத்துகளையோ கட்டுரைகளையோ வெளியிடுவதால் அது அந்த மதம் குறித்து மற்ற மதத்தவருக்கு நன்மதிப்பை ஏற்படுத்தும்.வருங்காலத்தில் மதம் தொடர்பான எவ்வித சர்ச்சைகளும் கேள்விகளும் எழாமல் இருக்கும் என்று கோலபிலா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கருத்துரைத்தார்.
மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யாரேனும் கருத்துகளை பதிவு செய்தாலோ வெளியிட்டாலோ அவர்கள் மேல் அமைச்சு கடுமையான நடவடிக்கை எடுக்கும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு நினைவூட்டலாக இருக்கும் என்றும் எடின் ஷஸ்லி எச்சரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − seven =