மத அடிப்படையிலான தீவிர அணுகுமுறைகளுக்குத் தடை

நாட்டில் வாழும் பல்லின மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அளவில் மேற்கொள்ளப்படும் மத அடிப்படையிலான தீவிர அணுகுமுறைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதனை, நாட்டில் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் அரசாங்க சார்பற்ற இயக்கங்களுக்கும் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தீர்க்கமாக வலியுறுத்தி இருக்கிறார். அதோடு, இந்நாடு இனம் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கும் எளிமைக்கும் முக்கியத்துவம் வழங்கும் நாடு என்பதையும் அவர் நினைவுறுத்தி உள்ளார்.
நாட்டின் நிலைத் தன்மைக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்க முயற்சி செய்யும் எந்தவொரு தரப்பினர் மீதும் அரசாங்கம் சமரசம் காணாது என்று அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
அதே வேளையில், நாட்டில் தன்பால் விரும்பிகள் மற்றும் திருநங்கைகளுக்காகப் போராடும் பரந்த கொள்கை கொண்ட சித்தாந்தங்களையும், தவறான போதனைகளையும் பரப்புவதற்கு அனுமதி வழங்கப் படாது.மனித வாழ்க்கையில் மதத்தை முக்கியமாகக் கருதாத மேற்கத்திய பரந்த கொள்கை மற்றும் மதச்சார்பின்மை சித்தாந்தங்களும் இதில் அடங்கும். அவர்கள் இஸ்லாமிய விதிகளையும் மீறக் கூடிய வரம்பில்லாத தனிநபர் சுதந்திரத்தை மேன்மைப்படுத்துகிறார்கள் என்று அவர் சொன்னார்.புத்ராஜெயாவில், நேற்று முன்தினம் நடைபெற்ற இஸ்
லாமிய அரசாங்க சார்பற்ற இயக்கங்களின் தலைவர் களுடனான சிறப்பு சந்திப்பின் போது, அவர் இதனைத் தெரிவித்தார். இஸ்லாமிய மதத்தைத் தற்காத்துக் கொள்ளும் முயற்சிகள், அம்மதத்தின் புனிதம் மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =