மத்திய பிரதேசத்தில் சோகம் – மின்னல் தாக்கி 6 பேர் பலி

மத்திய பிரதேசம் மாநிலத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. அங்குள்ள தேவாஸ் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்தார். தேவாஸ் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 6 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =