மதுபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு கடுமையான தண்டனை சட்டத்தில் திருத்தம்

0

மதுபோதையில் அபாயகரமாக வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் அபராதமும் விதிக்க வகைசெய்யும் சாலை போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இம்மாதம் 16ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தில் பிரிவு 41 முதல் 45 வரை திருத்தங்கள் செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. கடுமையான சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் லைசென்ஸ் ரத்து செய்யப்படுவது தொடர்பில் போக்குவரத்து சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படுகிறது.
மதுபோதை மற்றும் போதைப்பொருளை உட்கொண்டு அபாயகரமான முறையில் வாகனங்கள் ஓட்டி மற்றவர்களுக்கு மரணம் விளைவிப்போருக்கு நடப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. போக்குவரத்துச் சட்டம் 44 பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் படுகிறது. சட்டத் திருத்தத்திற்குப் பின்னர் முதன் முறையாக குற்றம் புரிபவர்களுக்கு 15 ஆண்டு சிறையும் அதன் பிறகு அடுத்தடுத்து குற்றங்கள் புரிவோருக்கு 20 ஆண்டுகள் இப்போது குற்றம் புரிபவர்களுக்கு 20,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படுகிறது. முதல்முறை குற்றத்திற்கு ஒரு லட்சம் வெள்ளியும் அடுத்தடுத்த குற்றங்களுக்கு 1 லட்சத்து 50,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம். மேலும், வாகனமோட்டும் லைசென்ஸ் 10 ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும். கடுமையான தண்டனை விதிக்க வகைசெய்யும் இந்த சட்டத்திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − nine =