மடிக்கணினிகளை கொடுப்பதாக அரசு கொடுத்த வாக்குறுதி காற்றில் பறந்ததா?

ஈப்போ பாராட் தொகுதியில் 67 மடிக்கணினிகள் மட்டுமே மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது என்றால் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதி காற்றில் பறந்ததா என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.குலசேகரன் கேள்வி எழுப்பினார். இணையதள கல்வியை மாணவர்கள் தொடரும் சூழ்நிலையை கோவிட் 19 தொற்று உருவாக்கியது. சிரமப்படும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கப்படும் என்று அரசு கூறியது. ஆனால், அரசாங்கம் குறைவாக மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஏன் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை முழுமையாக கொடுக்க முடியவில்லை என்பதை இந்த அரசு கூற வேண்டும். சிரமப்படும் குடும்பத்திற்கு கொடுக்கப்படும் மடிக்கணினிகள் கூடவா கொடுக்கப்படாமல் போக வேண்டும் என்று அவர் கேட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × two =