மஞ்சுவாரியரின் கனவை நனவாக்கிய மம்முட்டி

0

மலையாளத்தில் 1995–ல் கதாநாயகியாக அறிமுகமான மஞ்சுவாரியர் 50–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். பின்னர் மலையாள நடிகர் திலீப்பை திருமணம் செய்து சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் குடும்ப பிரச்சினையால் திலீப்பை விவாகரத்து செய்து 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். 
மஞ்சுவாரியரின் ஹவ் ஓல்டு ஆர் யூ தமிழில் ஜோதிகா நடிப்பில் 36 வயதினிலே என்ற பெயரில் வெளியானது. தனுஷ் ஜோடியாக அசுரன் படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். இந்த நிலையில் மலையாள படமொன்றில் மம்முட்டியுடன் நடிக்க மஞ்சு வாரியரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மஞ்சுவாரியர்

இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் இதுவரை மம்முட்டியுடன் இணைந்து அவர் நடிக்கவில்லை. திலீப்புடன் உள்ள நெருக்கம் காரணமாக மஞ்சுவாரியர் தனது படங்களில் நடிப்பதை மம்முட்டியும் விரும்பவில்லை. தற்போது முதல் முறையாக மம்முட்டி படத்தில் மஞ்சு வாரியர் நடிக்கிறார். 
இந்த படத்தை ஜோபின் டி சாக்கோ டைரக்டு செய்கிறார். படத்துக்கு ‘தி பிரீஸ்ட்’ என்று பெயர் வைத்துள்ளனர். திகில் படமாக தயாராகிறது. படப்பிடிப்பில் மம்முட்டியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை மஞ்சு வாரியர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ‘‘எனது கனவு நனவாகிறது. நன்றி மம்முட்டி’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − eight =