மஞ்சள் ஆற்றின் கற்களுக்கு ஓவியத்தால் உயிர் கொடுக்கும் ஆசிரியை

சீனாவின் மஞ்சள் ஆற்றில் கிடைக்கும் கற்களுக்கு தனது ஓவியத்திறமையால் ஒரு பெண் ஓவிய ஆசிரியை உயிர் கொடுத்து வருகிறார்.Ma Yulan என்ற அந்த ஆசிரியை, அவர் பணியாற்றும் பள்ளியில் புதிதாக ஓவிய வகுப்பு ஒன்றை துவக்க திட்டமிட்டபோது இந்த யோசனை அவருக்கு தோன்றியுள்ளது. அதன் பிறகு இத்தகைய கல்லோவியங்களை வடித்து வரும் இவர்,  ஒவ்வொரு கற்களின் வடிவம் மற்றும் வண்ணத்திற்கேற்ப ஓவியத்தை முடிவு செய்து உருவம் கொடுப்பதாக கூறுகிறார்.மஞ்சள் நதி பாய்ந்தோடும் தனது சொந்த ஊரான லான்சவ் நகரின் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக மஞ்சள் ஆற்றின் கற்களில் இந்த ஓவியபடைப்புகளை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + eighteen =