மசோதா 355 மக்களவையில் ஒரு நாள் நிறைவேற்றப்படும்; பாஸ் நம்பிக்கை

ஹூடுட் சட்டம் அமலாக்கம் செய்வதற்கு ஏதுவாக ஷரியா நீதிமன்றங்கள் (குற்றவியல் அதிகார எல்லை) மசோதா 1965 மீது திருத்தங்கள் செய்து நாடாளுமன்றத்தில் நிறைவேற் றும் தமது குறிக்கோள் ஒரு நாள் நிச்சயம் நடக்கும் என்று பாஸ் கட்சி நம்புகிறது.
முஸ்லிம்கள் அந்த இஸ்லாமிய சட்டம் அமலாக்கம் செய்யப்படுவதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர் என்பதை பாஸ் ஒப்புக்கொள் கிறது என்று தமது கட்சி பத்திரிகையான ஹராக்காவிடம் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் கமாருஸமான் முகமது கூறினார்.
அம்மசோதா மக்களவையில் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் இதுவரை விவாதிக்கப் படவேயில்லை அம்மசோதா ஒரு நாள் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அம்மசோதா ஷரியா சட்டங் களை அமல்படுத்துவதற்கு அடிப்படையாகும்.
முஸ்லிம் களுக்கான அந்த நற்செய்திக் காக நாங்கள் காத்திருக்கிறோம்.
கடந்த ஏப்ரல் 2017 அப்போதைய தேசிய முன்னணி அரசாங்கம் பாஸ் கட்சியைச் சேர்ந்த மாராங் எம்.பியான அப்துல் ஹாடி அவாங்கிற்கு ஒரு தனிப்பட்ட உறுப்பின ரின் மசோதாவை தாக்கல் செய்வதற்கு அனுமதியளித்தது. அம்மசோதா ஷரியா நீதிமன்றம் மசோதாவிற்கு திருத்தங்களை கொண்டுவர அனுமதி கோரியது.
அது மசோதா 355 என்றும் அழைக்கப்படுகிறது. எனினும் அதன் பிறகு மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை அம்மசோதா மக்களவையில் விவாதிக்கப்படவே இல்லை.
இப்போது பாஸ் கட்சி நாட்டை ஆளும் பெரிக்காத்தான் நேஷன லில் உறுப்பியம் பெற்றிருப்பதால் அம்மசோதாவை மக்களவையில் நிறைவேற்றப்படுவதற்கு அக்கட்சிக்கு நெருக்குதல் அளிக்கப்படுகிறது.
நம்பிக்கை கூட்டணி ஆட்சி காலத்தில் அம்மசோதாவை மக்களவையில் நிறைவேற்று மாறு பாஸ் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டாலும் அம்முயற்சி வெற்றி பெறவே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
நடப்பு அரசாங்கம் மிகவும் குறைந்த பெரும்பான்மையைக் கொண்டிருப்பதால் தற்போது அதனை செயல்படுத்துவதும் சந்தேகத்துக்குரியதாகும்.
தற்போது நாட்டில் இரு மாநிலங்களில் கிளந்தான் மற்றும் திரெங்கானு ஷரியா நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
தற்போது ஷரியா நீதிமன்றங்கள் தண்டனையாக மூன்று வருட சிறை, ரிம. 5,000 அபராதம் மற்றும் 6 பிரம்படிகள் மட்டுமே விதிக்க முடியும்.
இதனை 30 வருட சிறைத் தண்டனை, ரிம. 100,000 அபராதம் மற்றும் 100 பிரம்படி களாக மாற்றுவதற்கு ஏற்கெனவே ஏப்ரல் 2017இல் தாக்கல் செய்த தனிப்பட்ட உறுப்பினர் மசோதாவில் அப்துல் ஹாடி கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 10 =