மசீச அவதூறு வழக்கை தடுப்பதற்கு கெப்போங் எம்பியின் மனு ஜூலை 27இல் செவிமடுக்கப்படும்

0

தேசிய மாதிரி சீனப்பள்ளி களுக்கு ஒதுக்கப்பட்ட பொது மற்றும் அரசாங்கத்தின் நிதியை முறைகேடு செய்ததாக கூறப் படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக மசீச கட்சி தாக்கல் செய்த அவதூறு வழக்கை தடுப்பதற்கு கெப்போங் எம்பி லிம் லிப் எங்கின் மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை 27இல் செவிமடுக்கும்.
நேற்று புதன்கிழமை அவ்வழக்கின் மேலாண்மையின் போது நீதிபதி ரோஸானா அலி யூசோப் அந்த தேதியை நிர்ண யித்தார் என்று மசீசவை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் ஹவ் பெக் லியான் கூறினார்.
மேல் முறையீட்டு நீதிமன்றம் லிம்மின் வழக்கை நிராகரித்ததைத் தொடர்ந்து பெடரல் நீதிமன்றத்திற்கு அவர் முறையீடு செய்திருந்தார்.
அதன் முடிவு தெரியும் வரை மசீசவின் அவதூறு வழக்கை தடுப்பதற் காக கெப்போங் எம்.பி அம்மனுவை கோலாலம்பூர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் என்று மசீசவின் வழக்கறிஞர் ஹவ் பெக் கூறினார்.
கடந்த மார்ச் 15.3.2017 நாடாளுமன்ற வளாகத்தில் கெப்போங் எம்.பியான லிம் லிப் எங் அவதூறான அறிக்கை ஒன்றை மசீசவிற்கு எதிராக வெளியிட்டதாக குற்றஞ்சாட்டி அவர் மேல் ஜூலை 17.7.2017இல் அக்கட்சி வழக்குத் தாக்கல் செய்தது. கெப்போங் எம்பியின் அவ்வறிக்கை டிஜிட்டல் மற்றும் அச்சிடப்படும் ஊடகங்களிலும் வெளிவந்தன.
சீனப்பள்ளி களுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க நிதி ஒதுக்கீட்டை மசீச தவறாக பயன்படுத்தி ஊழல் செய்ததாக கூறுவது போல் கெப்போங் எம்.பியின் அறிக்கை அமைந்திருந்தது என்று அக்கட்சி குற்றஞ்சாட்டியது.
நஷ்ட ஈடாக மசீச ரிம. 100 மில்லியன் கோருகிறது. அத்துடன் அந்த அவதூறான வார்த்தைகளை அச்சிடுவது வெளியிடுவது போன்ற நடவடிக்கை களிலிருந்து பிரதிவாதியான கெப்போங் எம்.பி லிம் லிப் எங்கை கட்டுப்படுத்துமாறு அவ்வழக்கு கோருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + 12 =