மக்கெதிரான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்; பவுல் யொங் சூ கியோங்

0

தமக்கெதிராக சுமத்தப்பட்ட பாலியல் வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று பேராக் ஆட்சிக் குழு உறுப்பினரான பவுல் யொங் சூ கியோங் நேற்று ஈப்போ உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த விசாரணையில் சிக்கல் நிறைந்த சட்ட நுணுக்கங்கள் இருப்பதால் இந்த மனுவைச் சமர்ப்பித்ததாக பவுல் கூறினார். நீதி பரிபாலனத் துறை நிலைநாட்டப்பட இது அவசியம்.

இதற்கிடையில் இந்த வழக்கு வரும் டிசம்பர் 5ம் தேதி விசாரிக்கப்பட வேண்டும் என்று மாஜிஸ்டிரேட் நீதிபதி நோரஷிமா காலிட் நிர்ணயித்திருந்தார். அதே நேரத்தில் வழக்கு சம்பந்தப்பட்ட இரண்டு முக்கிய சாட்சிகள் தங்கள் அடையாளம் மறைக்கப்பட்ட நிலையில் விசாரிக்கப்பட வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் அஷஹார் மொக்தார் மனு செய்திருந்தார். அவர்களின் பாதுகாப்பு நிமித்தம் இது அவசியம் என்று அவர் கூறினார்.

யொங், 23 வயது நிரம்பிய வீட்டு பணிப்பெண்ணை கடந்த ஜூலை 7ம் தேதி, மெரு டேசா பார்க்கில் உள்ள இல்லத்தில் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 10 =