மக்காவ் நிதி மோசடியில் சம்பந்தப்பட்ட
போலீஸ்காரர்கள் நீக்கப்படலாம்

டத்தோ ஸம்ரி யாஹ்யா

‘மக்காவ் ஸ்கேம்’ எனப்படும் இணையதள சூதாட்டக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் போலீஸ்காரர்கள் வேலையில் இருந்து நீக்கப்படலாம் என புக்கிட் அமான் நேற்று எச்சரிக்கை விடுத்தது.
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் போது அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என புக்கிட் அமான் கண்காணிப்பு நேர்மைப் பிரிவு இயக்குநர் டத்தோ ஸம்ரி யாஹ்யா எச்சரித்தார்.
மக்காவ் ஸ்கேம் கும்பலுடன் நேரடித் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் 24 போலீஸ் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு ஆதாரங்கள் திரட்டப்படுகின்றன.
இவர்கள் மீதான விசாரணை முடிவடைந்ததும் அந்த அறிக்கை ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவுக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
24 போலீஸ் அதிகாரிகளும் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 14 =