மக்காவ், ஆப்பிரிக்கன் மோசடிகளுக்கு அதிகமான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்

0

நாட்டில் மக்காவ் மற்றும் ஆப்பிரிக்கன் மோசடிகளுக்கு பெண்களே பெருமளவில் பாதிக்கப்படுவதாக மகளிர், குடும்பம், சமூகநல மேம்பாட்டுத்துறை துணையமைச்சர் ஹன்னா இயோ கூறினார். இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் அவரை 1,911 மக்காவ் மோசடிகள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இவற்றில் 1,109 சம்பவங்களில் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதே காலகட்டத்தில் 1,303 ஆப்பிரிக்கன் மோசடிகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 1,070 சம்பவங்களில் பெண்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மோசடி கும்பல்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகளைப் பெறுபவர்கள், அவர்கள் கூறும் தகவல்கள் உண்மையானதா என்பதைத் தெரிந்துகொள்ள போலீஸாருடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
அதே வேளையில், இது போன்ற தொலைபேசி அழைப்புகளின் போது எந்தவொரு வங்கிக் கணக்கிலும் பணத்தைச் சேர்க்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அவர் நினைவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 4 =