மக்கள் பல்வேறு திறன்களைக் கொண்டிருக்க வேண்டும்

வருங்கால வேலை வாய்ப்பு களில் மக்கள் ஒரு துறையில் மட்டுமே கவனம் செலுத்தாமல் பன்முகத் திறன்களைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும் என்று தேசிய மீட்சி மன்றத்தின் (எம்.பி.என்.) தலைவர், டான்ஸ்ரீ முஹிடின் யாசின் வலியுறுத்தினார். இவ்வாறு செய்யப்படுவதன் முக்கியக் காரணம் கோவிட் தொற்றில் ஏற்பட்ட பாதிப்புகளால் வேலை முறைகள் மாறியதே ஆகும். இன்னும் சில காலங் களில் தொற்றின் சூழலில் வேலைகளைத் தொடங்க விருப்பதால் பல்வேறு துறைகளில் கொண்டுள்ள நிபுணத்துவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று மாநாடு ஒன்றில் உரையாற்றிய போது பாகோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான முஹிடின் யாசின் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × one =