மக்களுக்குக் கிடைத்த வெற்றி!

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பானது கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியைத் தோற்கடித்த மக்களுக்குக் கிடைத்த வெற்றி என பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றம் அறிக்கை ஒன்றில் கூறியது. கடந்த 2011இல் முதன் முறையாக 1எம்டிபி ஊழல் விவகாரத்தை வெளியிட்ட பிறகு மக்கள் அவ்வாறு செய்திருக்கா விட்டால், நீதி கிடைத்திருக்காது என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
இந்தத் தீர்ப்பு மலேசிய மக்களுக்குக் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும். மக்கள் கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியைத் தோற்கடித்து பக்காத்தான் ஹராப்பானுக்கு வெற்றியைத் தந்திருக்கா விட்டால், இந்த சட்ட நடைமுறை நிச்சயம் நடந்திருக்காது.
முதன் முறையாக கடந்த 2011இல் நாடாளுமன்றத்தில் டத்தோஸ்ரீ அன்வார், 1எம்டிபி ஊழல் குறித்து கேள்வி எழுப்பியதால்தான் இந்த ஊழல் விவகாரம் அம்பலமாகியது.
இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொண்ட முன்னாள் சட்டத்துறைத் தலைவர் மற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் தலைவர்கள் மன்றம் நன்றி கூறுவதாக அந்த அறிக்கை கூறியது.
அதே வேளையில், பக்காத்தான் ஹராப்பானுக்கு மக்கள் மீண்டும் வெற்றியைத் தர வேண்டும் என அவ்வறிக்கை குறிப்பிட்டது.
இந்த அறிக்கையில் அன்வார் இப்ராஹிம், அமானா தலைவர் முகமட் சாபு, ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 4 =