மக்களுக்கான ஊக்குவிப்புத் தொகையைத் துரிதப்படுத்துங்கள்

0

மக்களுக்கான பரிவு ஊக்குவிப்புத் தொகையைத் துரிதப்படுத்தும்படி பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தார்.
இந்த ஊக்குவிப்புத் தொகை ஏப்ரல் இறுதியில் வழங்கப் பட்டால், ஏழைகள் பெரும் சுமையை எதிர்நோக்கக்கூடும் என்றார் அவர்.
இந்த ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதில் தாமதம் இருக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் ஏழைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஏழைகளின் போராட்டத்தில் வசதியுள்ளவர்கள் பங்கு கொள்ளமாட்டார்கள் என அவர் சொன்னார்.
அரசாங்கத்தின் பரிவு ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1,600 வெள்ளி மற்றும் 1,000 வெள்ளி வழங்கப்படும் என பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கடந்த திங்கள்கிழமை அறிவித்திருந்தார்.
இதற்கிடையில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவினால் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மலேசியர்களுக்கு பரிவு ஊக்குவிப்புத் தொகையை (பிபிஎன்) உடனடியாக வழங்கும்படி அரசாங்கத்தை அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அஷ்ரப் வாஜ்டி டுசுக்கி கேட்டுக் கொண்டார்.
இந்தத் தொகையை மக்களுக்கு வழங்க ஏப்ரல் மாதம் இறுதி வரை அரசாங்கம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் அவர்.
ஏற்கெனவே பிரிம் மற்றும் பிஎஸ்எச் உதவித் தொகைக்கு விண்ணப்பித்துள்ள பி40 பிரிவினருக்கு இந்த ஊக்குவிப்புத் தொகையை காலம் தாழ்த்தாமல் விநியோகிக்கலாம் என அவர் தெரிவித்தார். நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவினால் வேலைக்குச் செல்ல இயலாத மலேசியர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + thirteen =