மக்களவை மே 18ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்றத் தொடர் அமர்வு மார்ச் 9இல் இருந்து மே 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பது மக்களவை நிலையாணை விதி 11(2) இன் கீழ் விதிமுறை களுக்கு ஏற்ப அமைந்திருக் கிறது என மக்களவை சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப் நேற்று தெரிவித்தார். இதனிடையே நடப்பு ஆண்டு மக்களவை அமர்வுகளின் தேதிகள் பற்றி பிரதமர் முஹிடின் யாசின் முன் மொழிந்ததைத் தாம் ஏற்றுக் கொண்டதாக அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இவ்வருடத்தின் முதல் தொடர் மே 18இல் இருந்து ஜூன் 23 வரை 15 நாட்களுக்கு நடைபெறும். அதனை பேரரசர் தொடக்கி வைப்பார். நோன்புப் பெருநாளை முன்னிட்டு மே 26ஆம் தேதியில் இருந்து 28ஆம் தேதி வரை மக்களவை செயல்படாது. மே 24, 25 ஆம் தேதிகளில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜூன் 1, 2 இல் சரவாக்கில் ‘காவாய் டாயாக்’ அறுவடை திருவிழா நடைபெறும்.

பேரரசரின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 8இல் மக்களவை செயல்படாது. நடப்பு ஆண்டின் இரண்டாவது தொடர் ஜூலை 27இல் இருந்து ஆகஸ்ட் 27 வரை 17 நாட்களுக்கு நடைபெறும். அச்சமயம் 12ஆவது மலேசியத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும். ஹரிராயா குர்பான் ஜூலை 30, அவால் முஹாரம் ஆகஸ்ட் 19, 20ஆம் தேதிகளில் கொண்டாடப்படுவதால், அந்த நாட்களில் மக்களவைக் கூட்டம் நடைபெறாது. நீண்டநாள் தொடர் செப்டம்பர் 28இல் தொடங்கி நவம்பர் 26 வரை நீடிக்கும். இத்தொடர் 36 நாட்கள் நீடிக்கும். அக்டோபர் 2இல் வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =