மக்களவை சபாநாயகர் மாற்றப்படலாம்

Tan Sri Annuar Musa during a press conference in Kuala Lumpur on 12 June 2016. Photo by Kamarul Akhir / www.asiana.my

அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் மக்களவை சபாநாயகரை பெரிக்காத்தான் நேஷனல் மத்திய அரசாங்கம் மாற்றக் கூடும் என அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா கோடி காட்டினார். ஒரு புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் புதிய சபாநாயகரைத் தேர்வு செய்வது நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். ஒரு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் மக்களவையில் மாற்றங்கள் ஏற்படும்.

புதிய சபாநாயகரும் இந்த மாற்றங்களில் அடங்குவார் என அவர் தெரிவித்தார். நேற்று இங்கு மசீசவுடன் நடந்த ஒரு சந்திப்பிற்குப் பிறகு முன்னாள் அமைச்சரும் கெர்த்தே நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் செய்தியாளர்களிடம் பேசினார். சபாநாயகரை மாற்ற வழக்கமாக புதிய அரசாங்கம் ஒரு முன்னறிவிப்பை வெளியிடும் என அவர் மேலும் தெரிவித்தார். கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் வெற்றிக்குப் பிறகு அமானாவைச் சேர்ந்த முகமட் அரிப் முகமட் யூசோப் நாடாளுமன்ற சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டார்.

இதனிடையே பெரிக்காத்தான் நேஷனல் விரைவில் ஒரு தலைமையகத்தை அமைக்கவிருக்கிறது. இதில் பெரிக்காத்தான் நேஷனல் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இடம் பெறுவார்கள் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × five =