மக்களவை கூட்டம் ஒத்திவைக்கப்பட வேண்டும்

வரும் மார்ச் 9ஆம் தேதி தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா கூறினார். நாடாளுமன்றக் கூட்டத்திற்கான தேதியை முன்னாள் அரசாங்கம் நிர்ணயித்திருந்த போதிலும், அந்தத் தேதி சாத்தியமற்ற ஒன்று என்றார் அவர். இருப்பினும் இந்தக் கூட்டம் குறித்து மக்களவை சபாநாயகருக்கு பிரதமர் தகவல் தரவேண்டியுள்ளதாக அவர் சொன்னார். வரும் மார்ச் 9ஆம் தேதி திட்டமிடப்பட்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு எதிராக பக்காத்தான் ஹராப்பான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல் செய்யத் திட்டமிட்டிருக்கின்றது.

நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக நடப்பு அரசாங்கத்திற்கு குறைந்தது 2 மாதங்கள் தேவைப்படுவதாக கெர்த்தே நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார். கோவிட் 19 வைரஸ் தாக்கத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்திவைப்பதற்கான திட்டம் எதுவுமில்லை என மக்களவை சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை குறித்து அனுவார் மூசா கருத்துரைத்தார். இதனிடையே புதிய பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் மக்களின் தேவைக்கேற்ப செயல்பட வேண்டும் என அவர் சொன்னார். முன்னாள் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் செய்த தவறுகளை புதிய அரசாங்கம் செய்யக்கூடாது என அவர் நினைவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × four =