மகாலட்சுமி வாசம் செய்யும் 108 இடங்கள்

இறைவனை சிந்தித்து வாழும் மக்கள் அனைவரும் விரும்புவது, லட்சுமி கடாட்சத்தைத் தான். லட்சுமியின் அருள் கிடைத்து விட்டால், அனைத்து செல்வங்களும் வந்து சேர்ந்து விடும் என்பது ஐதீகம். விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் லட்சுமிதேவியானவள், 108 இடங்களில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த 108 இடங்கள் எவை என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம். வெற்றிலை மேற்புறம், விபூதி, வில்வம், மஞ்சள், அட்சதை, பூரணகும்பம், தாமரை, தாமரைமணி, ஜெபமாலை, வலம்புரி சங்கு. மாவிலை, தர்ப்பை, குலை வாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், தேவ தாரு, அகில், பஞ்சபாத்திரம். கொப்பரைக்காய், பாக்கு, பச்சைக்கற்பூரம், கலசம், சிருக்சுருவம், கமண்டலநீர், நிறைகுடம், காய்ச்சிய பால், காராம்பசு நெய், குங்கிலியப் புகை. கஸ்தூரி, புனுகு, பூணூல், சாளக்கிராமம், பாணலிங்கம், பஞ்ச கவ்யம், திருமாங்கல்யம், கிரீடம், பூலாங்கிழங்கு, ஆல விழுது. தேங்காய்க்கண், தென்னம் பாளை, சங்கு புஷ்பம், இலந்தை, நெல்லி, எள், கடுக்காய், கொம்பரக்கு, பவளமல்லி, மாதுளை. திருநீற்று பச்சை, அத்திக் கட்டை, ஆகாசகருடன், வெட்டிவேர், அருகம்புல்,

விளாமிச்சுவேர், நன்னாரிவேர், களாக்காய், விளாம்பழம், வரகு. நெற்கதிர், மாவடு, புற்றுத்தேன், எலுமிச்சை, மணிநாக்கு, சோளக்கதிர், பாகற்காய், அகத்திக்கீரை, காசினிக்கீரை, பசலைக்கீரை. கூந்தல்பனை, மலைத்தேன், வெள்ளி, தங்கம், வைரம், உப்பு, யானை, மூங்கில், பசு நீர்த்தாரை, குளவிக்கூட்டு மண். நண்டுவளை மண், காளை கொம்பு மண், யானை கொம்பு மண், ஆல அடி மண், வில்வ அடி மண், வெள்ளரிப்பழம், மோதகம், அவல், காதோலை, கடல்நுரை. கண்ணாடி, மோதிரம் (தந்தம்), பட்டு, தையல் இல்லாத புதுத் துணி, பெண்ணின் கழுத்து, ஆணின் நெற்றி, கோவில் நிலை மண், வெயிலுடன் கூடிய மழைநீர், கீரிப்பிள்ளை, நுனிமுடிந்த கூந்தல். படிகாரம், அரச சமித்து, பன்றிக்கொம்பு, சந்திர காந்தக்கல், பிரம்பு, நாயுருவி, வாசல் நிலை, நெற்றி.

Related Tags :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × four =