மகாராஷ்டிரா- விநாயகர் சிலை கரைப்பின்போது 18 பேர் நீரில் மூழ்கி பலி

0

மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவு நிகழ்வான விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. நகரம் முழுவதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் கரைக்கப்பட்டன.

இன்றும் மும்பையின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்றது. மும்பையில் மட்டும்  3800 சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.

விநாயகர் சிலை கரைப்பு

சிலைகளை நீர்நிலைகளின் ஆழமான பகுதியில் கரைக்கும்போதும், குளிக்கும்போதும் எதிர்பாராதவிதமாக பலர் தண்ணீரில் விழுந்துள்ளனர். சிலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், விநாயகர் சிலை கரைப்பின்போது மாநிலம் முழுவதும்,18 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அமராவதி, நாசிக், தானே, சிந்துதுர்க், ரத்னகிரி, துலே, பந்தாரா, நான்டட், அகமதுநகர், அகோலா மற்றும் சடாரா ஆகிய மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − seven =