மகாதீர் விலகினால் காலி இடம் வருமே

0

சொன்னபடி துன் மகாதீர் விலகினால் அமைச்சரவையில் காலி இடம் ஏற்படும் என துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிஸா நேற்று குறிப்பிட்டார்.
அமைச்சரவையில் கெஅடிலான் தேசியத் தலைவரும் தமது கணவருமான அன்வார் இப்ராஹிமிற்கு இடமில்லை என்று மகாதீர் கூறிய கருத்துக்கு அவர் பதிலளித்தார். இப்போது அங்கு காலி இடம் இல்லை தான். ஆனால், சொன்னபடி துன் மகாதீர் விலகினால் காலி இடமே வந்துவிடுமே என்று அவர் சொன்னார்.
ஏற்கெனவே பேசிய அன்வார், நான் துன் மகாதீரின் அமைச்சரவையில் இடம் பெறும் நோக்கம் இல்லை. அமைச்சராகவும் விரும்பவில்லை. என் நேரத்திற்கு நான் காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here