மகாதீர் வாரிசானில் இணைத்துக் கொள்ளப்படலாம்

முன்னாள் பிரதமர் துன் மகாதீரை வாரிசான் தனது கட்சியில் இணைத்துக் கொள் ளக்கூடும் என அக்கட்சியின் நிரந்தரத் தலைவர் லியூ வூய் கியோங் கோடி காட்டினார்.
இருப்பினும் அதற்கு கட்சி சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளதாக முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான அவர் சொன்னார். தனது உறுப்பியம் சபா அல்லாதவர்களுக்கு அல்ல என்பதுதான் கட்சியின் சட்டமாகும்.
இருப்பினும் மகாதீரை இணைத்துக்கொள்ள கட்சியின் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட லாம் என்றார் அவர்.
இதற்கு சாத்தியம் உள்ளது. இதுவரை சபா மாநிலத்தில் மட்டும் தான் வாரிசான் கவனம் செலுத்தி வருகிறது.
ஆனால் வாரிசான் மலேசியா விற்கு கட்சியின் சட்டத்திற்கு திருத்தம் செய்யலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.
வழியில்லாத இதர நாடாளு மன்ற உறுப்பினர் வாரிசானில் இணைந்து கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக லியூ தெரிவித்தார்.
தற்போது நாடாளுமன்றத்தில் மகாதீர் மற்றும் 5 முன்னாள் பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சை அணியில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 2 =