மகாதீர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

0

பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்ற வதந்தியை பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரித்தார்.
அப்படி ஏதும் இருந்தால் எனக்குத் தெரியும். முஹிடீன் யாசின், லிம் கிட் சியாங், லிம் குவான் எங் ஆகியோருடன் தினமும் நான் பேசி வருகிறேன்” என்றார் அவர். இப்படி ஒரு திட்டம் தேவையற்றது. பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் ஒரு வலிமையான உறவைக் கொண்டிருக்கின்றனர் என நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
கடந்த சனிக்கிழமை தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மகாதீரை நீக்க, தாம் நேற்று காலை மாட்சிமை தங்கிய மாமன்னருடன் சந்திப்பு நடத்தியதாக வெளியான தகவலில் உண்மையில்லை என அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + twenty =