மகாதீர் பெர்சத்துவின் அவைத் தலைவர் அல்ல!

0

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் துன் மகாதீர் பெர்சத்து கட்சியின் அவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததை ‘ஆர்ஓஎஸ்’ எனப்படும் மலேசிய சங்கங்களின் பதிவிலாகா அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதாகவும் அதன் மூலம் அவர் இனியும் அக்கட்சியின் அவைத் தலைவர் இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று ஆர்ஓஎஸ் வெளியிட்ட கடிதம் ஒன்றில் மகாதீரின் பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அக்கட்சிக்கு நடப்பு அவைத் தலைவராக டான்ஸ்ரீ முஹிடின் யாசின் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
கட்சியின் உயர் பதவியில் இருப்பவர்கள் பதவி விலகினால் அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் தற்காலிகமாக அப்பதவியை வகிப்பர் என்று பெர்சத்து கட்சியின் சட்டவிதியில் கூறப்பட்டுள்ளது என்றும் ஆர்ஓஎஸ்ஸின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + thirteen =