மகாதீர் கௌரவமாக வெளியேற கடைசி வாய்ப்பு

இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் துன் மகாதீர் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்கப் போவதாக அறிவித் திருப்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு முக்கியத்துவம் தராமல் அவர் விரும்பும் யாரை வேண்டுமானாலும் நியமித்து தனது மனப் போக்கில் ஆட்சியை நடத்தும் அதிகாரம் பெற்றிருப்பார். அதில் இன, சமய தீவிரவாதப் போக்கைக் கொண்டிருக்கும் பாஸ் கட்சியையும் சேர்த்துக் கொள்ளவும் கூடும்.

மேலும், பக்காத்தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றத் தேவையில்லை. அவர் யாருடனும் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்க முடியும்.

சுருங்கக் கூறின், அது ஒருவரின் ஆட்சியாகத்தான் இருக்கும். மகாதீரின் ஆட்சியாகத்தான் இருக்குமே ஒழிய கட்சிகளின் ஆட்சியாக இருக்க முடியாது. அவர் மக்களுக்குப் பதில் சொல்லாமல், தமக்கு மட்டுமே பொறுப்பேற்பார். அவரின் திட்டம் வெற்றி பெற்றால், அவரை நம்பி ஆட்சியை ஒப்படைத்த மக்களுக்குச் செய்யும் துரோகமாகும் என சார்ல்ஸ் தெரிவித்தார்.

பேரரசர் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையைத் தெரிவிக்கும் முன்னரே, அவரின் உத்தரவின்றி, நாடாளுமன்றம் பெரும்பான்மை பெற்றிருக்கும் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் என அறிவித்தது வேண்டாத வேலை. இந்த வேளையில் மகாதீர் பிரதமர் பொறுப்பை அன்வார் இப்ராஹிமிடம் கொடுக்க வேண்டிய உடன் பாட்டை பலர் மறந்து விட்டனர் என சார்ல்ஸ் குறிப்பிட்டார்.

மேலும், அன்வார் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஆதரவைப் பெற்றிருந்தும், அவரை பிரதமராக அறிவிக்காதது ஏமாற்றம் அளித் திருப்பதாக அவர் குறிப்பிட்டார். நல்லாட்சியைத் தருவார், முன்பு போல சர்வாதிகாரியாக நடந்து கொள்ள மாட்டார் என்று நம்பியே மக்கள் அவரிடம் ஆட்சியை ஒப்படைத்தனர். ஆனால், சுயநலமி க்க அரசியல் வாதிகளின் தூண்டு தலினால் பக்காத்தான் ஆட்சிக்கு அவர் முடிவு கட்டியுள்ளார்.

எனவே, டாக்டர் மகாதீர் மீண்டும் பிரதமர் பதவிக்கு ஆசைப்படாமல், கௌரவமாக வெளியேறினால் மக்களின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெறுவார் என்பது திண்ணம் என சார்ல்ஸ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 3 =