மகாதீர் இடைக்காலப் பிரதமர் பணியைத் தொடங்கினார்

0

நேற்று காலை இடைக்காலப் பிரதமராக துன் மகாதீர் தமது பணியினைத் தொடங்கினார். நேற்று காலை 9.29 மணியளவில் பிரதமரின் அலுவலகத்தைக் கொண்டிருக்கும் பெர்டானா புத்ரா கட்டடத்திற்குள் அவர் நுழைந்தார்.

மலேசியா 2020 என்ற எண் பட்டையைக் கொண்டிருக்கும் அதிகாரப்பூர்வ வாகனத்தில் வந்தடைந்த பிரதமர் கட்டடத்திற்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்களுக்கு கையசைத்தவாறு கட்டடத்திற்குள் நுழைந்தார்.

நேற்று முன்தினம் காலை பிரதமர் பதவியை மகாதீர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இடைக்காலப் பிரதமராக மாட்சிமை தங்கிய மாமன்னர் அவரை நியமனம் செய்தார். புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனம் செய்யப்படும்வரை நாட்டு நிர்வாகத்தை மகாதீர் பராமரித்து வருவார் என அரசாங்கத் தலைமைச் செயலாளர் முகமட் ஸுக்கி அலி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − two =