மகாதீரை நீக்கத் திட்டம்!

கட்சியின் அவைத் தலைவர் பதவியை அகற்ற பெர்சத்து கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் பரிசீலித்து வருவதாக கட்சி வட்டாரம் ஒன்று கூறியது. பெர்சத்து அவைத் தலைவர் துன் மகாதீர் மற்றும் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடினுக்கு இடையே ஏற்பட்டுள்ள பூசலினால் கட்சி பிளவுபடாமல் இருக்க அவைத் தலைவர் பதவியை அகற்றுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது.
தற்போது கட்சியில் இரு தலைவர்கள் முக்கிய பதவிகளை வகித்து வருவதால், கட்சியை யார் வழி நடத்துவது என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.
பெர்சத்துவில் அதிகாரம் மிக்கவர் அவைத் தலைவரா? தலைவரா? என்ற நிலையைத் தவிர்க்க, அவைத் தலைவர் பதவியை அகற்றுவதுதான் பொருத்தமானது என கூறப்படுகிறது.
ஆகையால் கட்சியில் தலைவர் பதவிதான் உயர்ந்தது என அந்த வட்டாரங்கள் கூறின.
கட்சியில் அவைத் தலைவர் பதவியை அகற்ற வேண்டுமானால், ஓர் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டு சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.
இந்த நிலையில் மகாதீர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து அகற்றப்படுவார்கள் என அந்த வட்டாரம் குறிப்பிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 10 =