மகாதீரை இன்னும் மதிக்கிறேன்

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து மாறுபட்ட கருத்துகள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவைத் தாம் மரியாதைக்குரிய ஒரு நபராக பார்ப்பதாக மூத்த அமைச்சர் அஸ்மின் அலி கூறினார்.
“எனக்கு இன்னும் டாக்டர் மகாதீர் மீது அன்பு, மரியாதை உண்டு.
“இருப்பினும், எங்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல், பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த அவரது நடவடிக்கைக்கு நான் உடன்பட மாட்டேன்” என்றார் அவர்.
மகாதீரின் இந்தத் திடீர் முடிவு, 131 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை வழிநடத்த வேண்டுமெனும் தனது திட்டத்தை முறியடித்து, அவருக்குப் பதிலாக முஹிடினைப் பிரதமராக்கக் கட்டாயப்படுத்தியது என்று அவர் மேலும் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here