மகாதீருக்கு முஹிடின் கடிதம்

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருடன் சந்திப்பு நடத்த பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினர் வான் சைஃபுல் வான் ஜான் கூறினார்.இந்த சந்திப்பு எப்போது என்பது குறித்து துன் மகாதீரின் பதிலுக்காக தாங்கள் காத்திருப்பதாக அவர் சொன்னார்.
பெர்சத்து தலைவருடன் மகாதீர் விரைவில் சந்திப்பார் என தாம் நம்புவதாக உயர் கல்வி நிதியகத்தின் (பிடிபிடிஎன்) தலைவருமான அவர் சொன்னார்.முஹிடின் பிரதமராக நியமனம் பெற்றதைத் தொடர்ந்து பெர்சத்து கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
ஆகையால் கட்சியின் தலைமைத்துவம் ஒன்றிணைய வேண்டும் என பெர்சத்து உறுப்பினர்கள் எதிர் பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
கட்சி நலன் கருதி பெர்சத்து அவைத் தலைவரான துன் மகாதீர், முஹிடினை சந்திக்க சம்மதம் தருவார் என தாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 19 =