மகாதீருக்கு பக்காத்தானின் கதவு என்றும் திறந்திருக்கும்

தனது பிரதமர் வேட்பாளராக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பக்காத்தான் ஹராப்பான் தேர்வு செய்துள்ளபோதிலும், பக்காத்தானின் கதவு துன் மகாதீருக்கு என்றும் திறந்திருக்கும் என மக்களவை துணை சபாநாயகர் ஙா கோர் மிங் கூறினார். சபா மற்றும் சரவாக்கியர்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பக்காத்தான் ஹராப்பான் ஒன்றிணைக்க வேண்டும் என ஜசெக தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார். இவ்வாண்டு இறுதிக்குள் திடீர் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால், அந்தத் தேர்தலைச் சந்திக்க பக்காத்தான் ஹராப்பான் தயாராக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தனது கொள்கைகள் மற்றும் போராட்டங்கள் ஒன்றிணைந்து அனைத்து சக்திகளுடனும் பக்காத்தான் ஹராப்பான் பணியாற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் நமது போராட்டங்களுக்கு மகாதீர் ஆதரவு தெரிவித்தால், அவருக்கு பக்காத்தானின் கதவு என்றுமே திறந்திருக்கும் என ஙா குறிப்பிட்டார்.
மீண்டும் மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்ற தனது பிரதமர் வேட்பாளராக பிகேஆர் தலைவர் அன்வாரை கடந்த திங்கள்கிழமை பக்காத்தான் ஹராப்பான் முன்மொழிந்தது.
இருப்பினும் பக்காத்தான் பிளஸின் பிரதமர் வேட்பாளராக சபா முதலமைச்சர் ஷாபி அப்டாலை லங்காவி நாடாளுமன்ற உறுப்பினருமான மகாதீர் அண்மையில் முன்மொழிந்திருந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 5 =