மகாதீருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம்

0

கட்சியின் விதிமுறைகளை மீறியதாக பெர்சத்து அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் மற்றும் அவரது அணியினருக்கு எதிராக பெர்சத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடும் என மலாயா பல்கலைக் கழகத்தின் அரசியல் ஆய்வாளர் அவாங் அஸ்மான் பாவி கோடிகாட்டினார்.
பெர்சத்து உறுப்பியத்தில் இருந்து மகாதீர் நீக்கப் படலாம். இதன்வழி அவைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தகுதியை அந்த முன்னாள் பிரதமர் இழக்கக் கூடும் என்றார் அவர்.
பெர்சத்துவின் அவைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட மகாதீர் மனுத் தாக்கல் செய்துள்ளதாக கடந்த மார்ச் மாதம் பெர்சத்துவின் தேர்தல் குழுத் தலைவர் சைட் ஹமிட் அல்பார் கூறியிருந்தார்.
கடந்த பிப்ரவரியில் நடந்த அரசியல் குழப்பத்தின்போது ஒரு கடிதம் மூலம் பெர்சத்து அவைத் தலைவர் பதவியை மகாதீர் ராஜினாமா செய்து விட்டதாக நேற்று முன்தினம் சங்கங்களின் பதிவிலாகா உறுதிப்படுத்தியது.
இந்த வகையில் கட்சித் தேர்தல் நடைபெறும் வரை பெர்சத்து அவைத் தலைவர் பதவியை கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் வகிக்கலாம் என்றார் அவர்.
வரும் கட்சித் தேர்தலில் பெர்சத்து தலைவர் பதவிக்கு முஹிடினை எதிர்த்து மகாதீரின் புதல்வரும் பெர்சத்து துணைத் தலைவருமான முக்ரிஸ் மகாதீர் மற்றும் முகமட் ஃபாய்ஸ் அஸ்லி ஷாம் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் வரும் கட்சித் தேர்தலில் பெர்சத்து அவைத் தலைவர் பதவிக்கு முஹிடின் போட்டியிடுவதே சரியான தேர்வு என அவாங் அஸ்மான் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + twenty =