மஇகா விற்கு என்ன தான் பிரச்சினை?

0

கடந்த 10.3.2020 அன்று இந்தியாவிலுள்ள இந்துக்களின் புனித தலமான காசிக்கு 78 பேர் கேபிஎஸ் பயண நிறுவனத்தின் ஏற்பாட்டில் புனித யாத்திரை மேற்கொண்டனர். அவர்களை கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து ஓம்ஸ் பா. தியாகராஜன் வழியனுப்பி வைத்தார். பயணத் திட்டத்தின்படி அவர்களின் காசியாத்திரை 14.3.2020இல் முடிவடைந்தது.
அதில் 22 பேர் காசியில் இருந்து கோலாலம்பூருக்கு 14.3.2020இல் திரும்ப வேண்டியது. ஆனால் அன்றைய தினம் மலிண்டோ ஏர் விமானம் தனது சேவையை ரத்து செய்ததால் அந்த 22 பயணிகளும் காசியில் இருந்து 16 மணி நேர பயணத்திற்குப் பின் டில்லி சென்று சேர்ந்தனர். அங்கு இருந்து அவர்கள் அனைவரும் 15.3.2020 அன்று டில்லியிலிருந்து புறப்பட்டு 16.3.2020 அன்று கோலாலம்பூர் வந்தடைந்தனர்.
மீதமுள்ள 56 பயணிகள் நேரடியாக சென்னைக்கு சென்றடைந்தனர். அங்கிருந்து அவர்கள் 18.3.2020 – 19.3.2020 ஆகிய தேதிகளில் ராமேஸ் வரத்திற்கு புனிதயாத்திரையை தொடர திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், 18.3.2020 அன்று நடமாட்டத் தடை அறிவிக்கப்பட்டதால் இரு நாடுகளுக்கிடையிலான அனைத்து விமான போக்கு வரத்துகளும் ரத்து செய்யப்பட்டன. அதனால், அந்தப் பயணிகள் நாடு திரும்ப முடியாமல் திருச்சியில் சிக்கிக் கொண்டனர்.
இதுவரை பல நாடுகளிலிருந்து பயணிகளை அரசாங்கம் மீட்டுக் கொண்டு வந்திருந்தாலும் இவர்கள் தொடர்ந்து தமிழகத்திலேயே சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.


இதற்கிடையே¹மஇகாவின் ஏற்பாட்டிலான 6 விமானங்களில் தமிழகத்திலிருந்து மலேசியா விற்கு பயணிகள் மீட்டுக் கொண்டு
வரப்பட்டாலும் இந்த 56 பேர் நாட்டிற் குத் திரும்ப முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
கே.பி.எஸ். நிறுவனம் 90 பயணிகளை பராமரித்து வருகிறது
தாய்நாட்டிற்கு திரும்ப வரமுடியாமல் தவித்துக் கொண்டி ருக்கும் அவர்கள் அனைவருக்கும் உணவு மற்றும் தங்கு விடுதி செலவுகள் மேலும் பெரும் சுமையாக இருந்து வருகிறது. அவர்களை கேபிஎஸ் பயண நிறுவனம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்ததால் அவர்கள் தொடர்ந்து கேபிஎஸ் நிறுவனத்துடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.
தற்போது இவர்களுடன் மலேசியாவிற்கு திரும்ப முடியாமல் மேலும் 34 பேர் இணைந்து மொத்தம் 90 பேர் திருச்சியில் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
அவர்கள் அனைவருக்கும் கே.பி.எஸ். நிறுவனம் திருச்சியில் தங்கியிருப்பதற்கும் அவர்களுக்கான உணவிற்கும் தன்னால் இயன்ற ஏற்பாட்டை செய்து வருகிறது. அதன் செலவில் ஒரு பகுதியை ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா. தியாகராஜன் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்.


இவர்களை விரைவாக நாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என எல்லா முயற்சிகளையும் தாம் மேற்கொண்டு வருவதாக கே.பி.எஸ். நிறுவன உரிமையாளர் கே.பி.சாமி கூறினார்.
இதற்கிடையே அவர்களுடைய பயண ஏற்பாட்டிற்கான செலவையும் அவர்களுக்குரிய உணவு மற்ற அவசர தேவைகளுக்கான செலவிற்கு உதவி செய்வதற்கும் அவர் ஓரிரு நல்லுள்ளங்களிடம் உதவியை நாடியுள்ளார்.
ஆனால், அவரது முயற்சியை களங்கப்படுத்தி வாட்சப் புலனத்தில் மஇகாவைச் சேர்ந்த பெட்டாலிங் ஜெயா பழனி என்பவர் மிகவும் தரக்குறைவாகவும், கொச்சையாகவும், கேவலமாகவும் பேசி பதிவிட்டுள்ளதோடு அதை பல புலனக் குழுக்களிலும் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக 6 விமானங்கள் வழி மலேசியாவிற்கு இந்தியாவில் சிக்கியிருக்கின்றவர்களை கொண்டு வர மஇகா ஏற்பாடு செய்திருக்கிறது.
தற்சமயம் அரசாங்கத்தில் அங்கம் பெற்றிருக்கின்ற கட்சி என்ற வகையில் அந்த ஏற்பாடுகளைச் செய்யும் கடப்பாட்டை மஇகா கொண்டுள்ளது. அவ்வகையில் மஇகா சேவையாற்றி வருகிறது.
இந்தியாவிலிருந்து தருவிக்கப் படும் பயணிகளுக்கு மஇகா கேபிஎஸ் பயண நிறுவனத்தைப் போல் பல நல்லுள்ளங்களை அணுகி அவர்களிடம் நிதியைப் பெற்றுதான் மலேசியாவிற்கு பயணிகளை திருப்பிக் கொண்டு வருகிறது. அவ்வகையில் மைக்கி எனப்படும் மலேசிய இந்திய தொழிலியல் சங்கங்களின் சம்மேளம் 1 லட்சம் வெள்ளி வழங்கியுள்ளது.
ஆதரவளித்தவர்களுக்கு நன்றி
மைக்கிக்கு இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.
அதேபோல் தொழில

தொழிலதிபர் பிரகதீஸ்குமார் நேபாளில் இருந்த மலேசியர்களை அழைத்து வர மஇகா செய்த ஏற்பாட்டிற்கு முழு தொகையான 1 லட்சத்து70 ஆயிரம் வெள்ளியை ஏற்றுக் கொண்டு தனி விமானம் மூலம் நேபாளத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டு வர உதவி செய்துள்ளார். அவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.
இப்படி பொதுமக்களிடம் இருந்து பெறும் நிதியின் வழிதான் மஇகா மலேசியாவிற்கு பயணிகளைக் கொண்டு வருகிறது. உலகில் பல இடங்களில் இருந்து அரசாங்கம் தன் சுய முயற்சியில் மக்களை மீட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் சிக்கியிருக்கின்ற பயணிகளை மஇகா கொண்டு வருவதாக கூறுவதற்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை. மஇகாவிற்கு இருக்கின்ற கடப்பாடு அவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்த கேபிஎஸ் பயண நிறுவனத்திற்கும் உள்ளது. மற்றவர்களது முயற்சியை மஇகா தடங்கள் செய்வதும் கொச்சைப்படுத்துவதும் முறையல்ல . இந்த விவகாரத்தில் மஇகாவின் பிரச்சினைதான் என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =