மஇகா பாசீர் கூடாங் மகளிர் பகுதியின் உதவித் திட்ட பதிவு!

மஇகா பாசீர் கூடாங் தொகுதி மகளிர் பகுதி தனித்து வாழும் தாய்மார்களுக்கான உதவி நிதி, சமூக நல இலாகா நிதி, மஇகாவின் பொருள் உதவித் திட்டம் உட்பட பல்வேறு உதவித் திட்டத்திற்கான பதிவு நடவடிக்கையினை மேற்கொண்டது.
தொகுதி மகளிர் பகுதித் தலைவி திருமதி விமலா கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் அரசாங்கம் மற்றும் கட்சி வழங்கும் சமூக நல உதவித் திட்டங்களில் பதிவு செய்து பயனடையும்படி தனித்து வாழும் தாய்மார்கள், வறிய நிலையில் வாழ்வோரை அறிவுறுத்தியதோடு மகளிர்களும், தனித்து வாழும் தாய்மார்களும் தகவல் அறிந்த விழிப்புணர்வு பெற்ற சமுதாயமாக திகழ வேண்டும் என வலியுறுத்தினார்.
மஇகா பாசீர் கூடாங் தொகுதி பணிமனையில் நடைபெற்ற இந்த பதிவு நடவடிக்கையில் சுமார் 100 பேர் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு தங்களின் பெயரினை பதிவு செய்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × five =