மஇகா தெங்காரோ தொகுதி பேராளர் மாநாடு

மஇகா தெங்காரா தொகுதி யின் 27ஆவது பேராளர் மாநாடு கோத்தா திங்கி மய்ரெஸ் தங்கு விடுதியில் நடைபெற்றது. மஇகா ஜொகூர் மாநிலப் பிரதிநிதியாக கோத்தா திங்கி தொகுதித் தலைவர் எஸ். வடிவேலு இம் மாநாட்டை தொடக்கி வைத்தார்.
இம்மாநாட்டில் நிறைவுரை யாற்றிய சுகாதார அமைச்சரும், தெங்காரா தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா அரசாங்கம் மக்கள் நலனுக்கு மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்தும் கோவிட் – 19 தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு மேற் கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார்.
முன்னதாக தலைமையுரை யாற்றிய தொகுதித் தலைவர் பசுபதி மாரியப்பன் சமூகம் சேர்ந்த பணிகளுக்கு தொகுதி முன்னுரிமை வழங்கி செயல்படுவதாக கூறியதோடு, மாநாட்டில் தொகுதியில் உள்ள சமூக அமைப்புகளின் தலைவர் கள், ஆலயத் தலைவர்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள் ளது அவர்களுக்கும் தொகுதி நிர்வாகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அடாம் பாபாவுக்கும் இடையே நல்லுறவை பேண வழி வகுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மஇகா தெங்காரா தொகுதி செயலாளர் ராஜா @ பி. முருகன் வரவேற்புரையாற்றிய இம்மாநாட் டில் பேராளர்களுடன் பந்திங் சட்ட மன்ற உறுப்பினர் துவான் அஹாஸ்ரின் ஹஸிம், பாசீர் ராஜா சட்டமன்ற உறுப்பினர் புவான் ரஷ்டா இஸ்மாயில், அம்னோ தெங்காரா தொகுதி துணைத் தலைவர் துவான் நசாருடின் அமாட் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − 7 =