போலி முகநூலில் செய்தி வெளியிட்டாரா? நஜிப் மீது விசாரணை

0

பேரா மாநில ஜசெக தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான ஙா கோர் மிங்கை மையப்படுத்தி சிறுமைப்படுத்தும் தகவலை வலைத்தளங்களில் வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப்பை விசாரணைக்கு அழைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவ்வாரத்தில் அவரை அழைக்கலாம் என்று நினைக்கிறோம் என்று புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை இலாகாவில் இயக்குநர் ஹுஸிர் முகமட் கூறினார். இந்த வாரம் முடிவதற்குள் அவரிடம் வாக்குமூலம் பெறப்படும் என்றார் அவர். மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானை சிறுமைபடுத்தும் தகவலைக் கொண்ட ஒரு செய்தியை முகநூலில் வெளியிட்டதாக நஜிப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தெலுக் இந்தான் எம்பியுமான ஙா, இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்.

தமது பெயரைத் தாங்கிய ஒரு போலி முகநூலில் நஜிப் இந்த சில்லறைத் தனமான காரியத்தை செய்திருக்கிறார் என்று நஜிப் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 9 =