போலி செய்திகள் தொடர்பில் 370 அறிக்கைகள் வெளியீடு

நாடு முழுவதும் இதுவரை கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான போலி செய்திகள் குறித்த 370 அறிக்கைகளை தொடர்புத்துறை மற்றும் பல்லூடக அமைச்சு வெளியிட்டிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பரவும் போலி செய்திகளைக் கண்காணிக்கும், பி.ஆர்.பி. எனப்படும் விரைவு பதிலளிப்பு குழுவின் கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் அந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டிருப்பதாக அதன் அமைச்சர் டத்தோ சைஃபுடின் அப்துல்லா தெரிவித்தார்.
கோவிட்-19 காலகட்டத்தில் மட்டும் நாங்கள் 370 போலி செய்திகள் தொடர்பில் அறிக்கைகளை வெளியிட்டோம். அவற்றில் பெரும்பாலானவை கோவிட் -19 தொடர்புடையவை,”
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, தேசிய பரிவுமிக்க உதவித் திட்டம், மற்றும் சமூக நலத்துறையிடம் இருந்து உதவிகள் போன்ற போலி செய்திகள் பகிரப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
சபா சட்டமன்றத் தேர்தல் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதிச் செய்ய பி.ஆர்.பி,.போலி செய்திகளைக் கண்காணிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =