போலியான வாக்குமூலத்தை வழங்கிய ஆடவர் மீதான நீதிமன்ற வழக்கில் பெர்கெசோ வெற்றி

சமூக பாதுகாப்பு அமைப்பு எனப்படும் பெர்கெசோவிடமிருந்து இழப்பீட்டை பெறும் முயற்சியில் போலியான வாக்குமூலத்தை வழங்கிய ஆடவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற, அதில் பெர்கெசோ தரப்பு வெற்றி பெற்றது.
ரோஸ்லி முகமட் அலி (வயது 56) என்ற ஆடவர் தமக்கு விபத்து நேர்ந்தது என்று பொய்யான வாக்குமூலம் வழங்கி கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இழப்பீட்டைப் பெற்றுள்ளார். அவருக்கு 41,158.39 வெள்ளி இழப்பீடு கிடைத்துள்ளது.
ஆனால், கடந்த 2008ஆம் ஆண்டு அவர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவானது. நேற்று நடைபெற்ற வழக்கில் 10 சாட்சிகள் வாக்குமூலம் வழங்கினர்.
அதன் அடிப்படையில் ரோஸ்லி மீது 93 (ய) 1969 தொழிலாளர் சமூக பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அவ்வழக்கின் போது, நீதிபதி புவான் சித்தி ஹானும் ரொஸ்லிக்கு 8 மாத சிறைத்தண்டனையும், 8000 வெள்ளி அபராதமும் விதித்தார்.
பெர்கெசோ தரப்பு வழக்கறிஞர்கள் இவ்வழக்கில் வாதாட, தீர்ப்பு பெர்கேசோவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. இவ்வழக்கில் பேராக் மாநில பெர்கெசோ இயக்குநர், அந்தோணி டாஸ் வருகை புரிந்திருந்தார்.
இதனிடையே, போலியான வாக்குமூலம் வழங்கி பெர்கெசோவை ஏமாற்ற நினைப்பவர்களுடன் பெர்கெசோ என்றுமே அனுசரித்துப் போகாது என்றும் அந்தோணி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 3 =